For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

By Maha
|

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம்.

முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். சரி, இப்போது அந்த தஹி கபாப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Dahi Ke Kebab Recipe For Ramadan

தேவையான பொருட்கள்:

காட்டேஜ் சீஸ் - 200 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வதக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் (பேஸ்ட் செய்தது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
தயிர் - 1 கப்
பிரட் தூள் - 300 கிராம்
முந்திரி - 2 டேபிள் ஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
முட்டை - 2 (பௌலில் அடித்துக் கொள்ளவும்)
பிரட் தூள் - கோட்டிங்கிற்கு தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காட்டேஜ் சீஸை துருவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் வெங்காயம், வெங்காய பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, தயிர், பிரட் தூள் மற்றும் முந்திரி பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறிதை எடுத்து சிறு உருண்டைகளாக்கி, தட்டையாக தட்டை, முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டிக் கொண்டு, எண்ணெய் சூடானதும், எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து கலவையையும் தட்டி பொரித்து எடுத்தால், தஹி கபாப் ரெடி!!!

English summary

Dahi Ke Kebab Recipe For Ramadan

Dahi ke Kabab is a must to prepare during the holy month of Ramadan. This delicious kebab recipe is a must try.
Desktop Bottom Promotion