For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்பூசணி ஸ்மூத்தி

By Maha
|

பொதுவாக ஸ்மூத்தியானது பால் கொண்டு தான் செய்யப்படும். ஆனால் தயிரை தர்பூசணியுடன் சேர்த்து ஸ்மூத்தி செய்து சாப்பிட்டால், இன்னும் சூப்பராக இருக்கும். அதிலும் கோடையில் இதனை செய்து சாப்பிட்டால், இது வெயிலின் தாக்கத்தை தணிக்கும்.

கோடைக்காலத்தில் தர்பூசணி விலை மலிவில் கிடைப்பதால், இந்த தர்பூசணியை முடிந்த அளவில் பலவாறு சாப்பிடுங்கள். இப்போது அந்த தயிர் கொண்டு செய்யப்படும் தர்பூசணி ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Watermelon Smoothie With Yogurt Recipe

தேவையான பொருட்கள்:

தர்பூசணி - 1 கப்
வாழைப்பழம் - 1 (வேண்டுமானால்)
க்ரீக் வென்னிலா தயிர் - 1/2 கப்
ஐஸ் கட்டி - தேவையான அளவு
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பின்னர் தர்பூசணியில் உள்ள விதையை நீக்கிவிட்டு, பிளெண்டரில் போட்டு அரைத்து, அதில் வாழைப்பழம், வென்னிலா தயிர் சேர்த்து அடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரையை சேர்த்து மீண்டும் அரைத்து, அதனை ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், தர்பூசணி ஸ்மூத்தி தயார்!

English summary

Watermelon Smoothie With Yogurt Recipe

Watermelon with yogurt smoothie is a cooling summer drink which can be easily prepared. Check out the watermelon smoothie recipe to beat the summer heat.
Story first published: Wednesday, April 9, 2014, 17:51 [IST]
Desktop Bottom Promotion