For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசலைக்கீரை பக்கோடா

By Maha
|

மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், காரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றும் போது, பசலைக்கீரை வீட்டில் இருந்தால், அதனைக் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக மட்டுமின்றி, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இங்கு அந்த பசலைக்கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Spinach Pakora

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 200 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2-4 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பசலைக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, தண்ணீர் ஊற்றி பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டையாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பசலைக்கீரை பக்கோடா ரெடி!!!

English summary

Spinach Pakora

To try the spinach pakora recipe, you need not have a lot of fancy ingredients. It is fairly simple recipe. But the good part is that it is really delicious.
Story first published: Monday, August 18, 2014, 17:21 [IST]
Desktop Bottom Promotion