For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்துணர்ச்சியூட்டும் மசாலா டீ

By Maha
|

குளிர்காலத்தில் மாலை வேளையில் சூடாக மசாலா டீ செய்து குடிக்க சூப்பராக இருக்கும். ஆனால் அத்தகைய மசாலா டீயை கடைக்கு சென்று தான் வாங்கி குடிப்போம். ஏனெனில் மசாலா டீ எப்படி செய்வதென்று பலருக்கு தெரியாது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மசாலா டீயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து மாலை வேளையில் குடித்தால், குளிருக்கு இதமாக இருப்பதுடன், மனதை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும்.

இது தொடர்பான வீடியோ...

Refreshing Masala Chai Recipe

தேவையான பொருட்கள்:

பால் - 3/4 டம்ளர்
தண்ணீர் - 1/2 டம்ளர்
டீ தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு

மசாலாவிற்கு...

மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த இஞ்சி - 1
ஏலக்காய் - 2 (தட்டியது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1-2

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விட வேண்டும்.

பாலானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் தீயை குறைத்து, சர்க்கரை மற்றும் 2 டீஸ்பூன் மசாலா பொடியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி பரிமாறினால், மசாலா டீ ரெடி!!!

English summary

Refreshing Masala Chai Recipe

Recipe for masala chai is easy. This Indian masala chai recipe can be made quickly. Masala tea is good for health. Read on to know the masala tea recipe.
Desktop Bottom Promotion