For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாம்பே டோஸ்ட்

By Maha
|

மாலையில் பசியுடன் வரும் குழந்தைக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாக பாம்பே டோஸ்ட் செய்து கொடுக்கலாம். அதிலும் இந்த ரெசிபியானது இனிப்பாக இருப்பதால், குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் டயட்டில் இருப்போர் காலையில் இதனை செய்து சாப்பிடலாம்.

சரி, இப்போது அந்த பாம்பே பிரட் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பிரட் - 6 துண்டுகள்
பால் - 1/2 கப்
முட்டை - 2
சர்க்கரை - தேவையான அளவு
நெய் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

Quick And Easy Bombay Toast Recipe

பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் நனைத்து வாணலியில் போட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான பாம்பே டோஸ்ட் ரெடி!!!

குறிப்பு:

* இந்த டோஸ்ட் செய்ய நெய்க்கு பதிலாக வெண்ணெயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

* இந்த டோஸ்ட் செய்வதற்கு கோதுமை பிரட் போன்ற பிரட்டிற்கு பதிலாக பால் பிரட் தான் சிறப்பானதாக இருக்கும்.

English summary

Quick And Easy Bombay Toast Recipe

Bombay toast recipe is simple. Recipe for Bombay toast is popular in India. It is also called French toast recipe. Read on to know how to make it...
Story first published: Thursday, November 20, 2014, 16:51 [IST]
Desktop Bottom Promotion