For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதுளை எலுமிச்சை ஜூஸ்

By Maha
|

மாதுளை எலுமிச்சை ஜூஸானது இதய நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான பானமாகும். அதுமட்டுமல்லாமல் ஒரு டம்ளர் இந்த ஜூஸை பருகினால், புற்றுநோய் தடுக்கப்படுவதோடு, உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவை குறையும்.

இங்கு மாதுளை எலுமிச்சை ஜூஸை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

Pomegranate Juice With Lemon Recipe

தேவையான பொருட்கள்:

பெரிய மாதுளை - 1
சர்க்கரை - தேவையான அளவு
எலுமிச்சை - 1/2
உப்பு - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மாதுளையை தோலுரித்து, விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் விதைகளைப் போட்டு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு, மிளகு தூள், சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலந்தால், சுவையான மாதுளை எலுமிச்சை ஜூஸ் ரெடி!!!

English summary

Pomegranate Juice With Lemon Recipe

Pomegranate juice is a healthy appetizer for the heart patients. A glass of pomegranate juice reduces the chances of cancer, protects the arteries, lowers blood pressure and cholesterol levels. Take a look at the healthy pomegranate juice with lemon recipe.
Story first published: Wednesday, February 19, 2014, 16:59 [IST]
Desktop Bottom Promotion