For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபி

By Maha
|

எத்தனை உருளைக்கிழங்கு ரெசிபிக்கள் இருந்தாலும், அனைத்தையும் சமைத்து சுவைத்து பார்க்கும் போது, ஒவ்வொரு ரெசிபியிலும் உருளைக்கிழங்கின் சுவையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. அப்பேற்பட்ட உருளைக்கிழங்கைக் கொண்டு செய்யக்கூடிய ஒருவகையான பக்கோடா ரெசிபியைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.

இதுப்போன்று சுவையான வேறு ரெசிபி: முந்திரி பக்கோடா

இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, பள்ளி முடிந்து வரும் குழந்தைகள் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த உருளைக்கிழங்கு பக்கோடா ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

New Potatoes Pakora Recipe

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4-5
கடலை மாவு - 1 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு எள்ளு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப் (பொரிப்பதற்கு)
தண்ணீர் - 1/2 கப்
நறுக்கிய வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, அதனை துண்டுகளாக்கி நீரில் ஊற வைக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் ஓமம், மிளகாய் தூள், கருப்பு எள்ளு, உப்பு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து, கடவை மாவு கலவையில் பிரட்டி, பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப்போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா ரெடி!!!

English summary

New Potatoes Pakora Recipe

The new potatoes pakora recipe is easy. Boldsky has added a special ingredient which makes the evening snack all the more delicious.
Story first published: Monday, January 20, 2014, 15:44 [IST]
Desktop Bottom Promotion