For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நூடுல்ஸ் பக்கோடா

By Maha
|

வெயில் இன்னும் வாட்டி வதைத்தாலும், அவ்வப்போது மழை வந்து, அந்த வெப்பத்தை தணித்து வருகிறது. ஏனெனில் மழைக்காலமானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மழைக்காலத்தில் மாலை வேளையில் நிச்சயம் வீட்டில் ஏதேனும் மொறுமொறுவென்று செய்து சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

எனவே மாலையில் நன்கு சுவையாக செய்து சாப்பிட நினைத்தால், நூடுல்ஸ் பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது சற்று வித்தியாசமாக இருந்தாலும், சுவையாக இருக்கும். இங்கு அந்த நூடுல்ஸ் பக்கோடாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Hot & Tasty Noodles Pakora Recipe

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 250 கிராம் (1 பாக்கெட்)
சோள மாவு - 1 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5-6 (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (நறுக்கியது)
மைதா - 1/2 கப்
பால் - 1 கப்
பிரட் தூள் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், நூடுல்ஸை அதில் போட்டு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இறக்கி, நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த நூடுல்ஸ் பௌலில் வெங்காயம், இஞ்சி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பபில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மைதா சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதில் பால் சேர்த்து நன்கு மென்மையான பேஸ்ட் போலாக்கிக் கொண்டு, ஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே சமயம் ஒரு தட்டில் பிரட் தூளை போட்டுக் கொள்ள வேண்டும்.

இறுதியில் உருட்டி வைத்துள்ள பக்கோடாவை மைதாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பக்கோடாக்களையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், நூடுல்ஸ் பக்கோடா ரெடி!!!

English summary

Hot & Tasty Noodles Pakora Recipe

Try some different recipes to enjoy a rainy day. Noodles is an all time favourite dish for youngsters and kids. How about making pakoras with these noodles? Try this noodles pakora snack on a monsoon evening.
Story first published: Wednesday, June 4, 2014, 16:06 [IST]
Desktop Bottom Promotion