For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் மீன் குழம்பு

By Maha
|

மீன் குழம்பில் பல ஸ்டைல்கள் உள்ளன. அதில் ஒரு ஸ்டைல் தான் தேங்காய் அரைத்து ஊற்றி செய்வது. பொதுவாக இந்த முறையானது கேரளாவில் தான அதிகம் செய்யப்படும். ஆகவே இப்போது தேங்காய் அரைத்து ஊற்றி எப்படி மீன் குழம்பு செய்வதென்று பார்ப்போம்.

மீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆகவே இதனை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட வேண்டும். எனவே விடுமுறை நாட்களில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் மீன் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Fish Curry With Coconut Recipe

தேவையான பொருட்கள்:

மடவை மீன் - 1/2 கிலோ (நன்கு கழுவி வெட்டியது)
வெங்காயம் - 3 + 1
பூண்டு - 2 பற்கள் (நறுக்கியது)
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 2 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்ஸியில் தேங்காய், பூண்டு, 3 வெங்காயம், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அது சமயம் மீதமுள்ள 1 வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, பின் புளி சாறு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.

* பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

* இறுதியில் சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள மீனை சேர்த்து, குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான தேங்காய் மீன் குழம்பு ரெடி!!!

English summary

Fish Curry With Coconut Recipe

Fish curry with coconut is a special Kerala style recipe that can be prepared easily and tastes delicious too. You can either use coconut milk or add grated coconut to prepare this fish curry. Check out the recipe.
Story first published: Saturday, January 4, 2014, 11:44 [IST]
Desktop Bottom Promotion