For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பன்னீர் பக்கோடா: வீடியோ

By Maha
|

மழைக்காலத்தில் மாலை வேளையில் டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாகவும், காரமாகவும் இருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றினால், உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அருமையான சுவையில் பக்கோடா செய்து சாப்பிடுங்கள்.

இங்கு பன்னீரைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று தெளிவாக வீடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, அதன் படி செய்து மாலையில் சாப்பிட்டு, சந்தோஷமாக இருங்கள்.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/Ad-LfJ8ER18?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

தேவையான பொருட்கள்:

துருவிய பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவி சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் அளவில் லேசாக தண்ணீர் தெளித்து, பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பக்கோடா ரெடி!!!

English summary

Crunchy Paneer Pakoda: Video

Paneer is a versatile ingredient. There are numerous Indian snacks recipes that can be prepared using paneer and one such classic appetizing tea time snack or a rainy day treat is Paneer Pakoda.&#13;
Story first published: Wednesday, June 25, 2014, 16:36 [IST]
Desktop Bottom Promotion