For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொறுமொறுப்பான... இனிப்பு தட்டை

By Maha
|

மாலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் ஏதேனும் செய்து கொடுக்க ஆசையா? அப்படியானால் இனிப்பு தட்டையை செய்து கொடுங்கள். இது மொறுமொறுவென்று இனிப்பாக இருப்பதுடன், பெரியவர்கள் சாப்பிடும் வண்ணமும் இருக்கும். மேலும் இது ஒரு மாலையில் வீட்டில் செய்து சாப்பிடக்கூடிய சூப்பரான ஸ்நாக்ஸ்.

இங்கு அந்த இனிப்பு தட்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Crispy Sweet Thattai

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 1/2 கப்
ரவை - 1/4 கப்
நெய் - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும்.

சர்க்கரையானது நன்கு கரைந்த பின்னர், அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, நெய், எள்ளு சேர்த்து, வெதுவெதுப்பான நிலையில் சர்க்கரை பாகுவை சேர்த்து கரண்டி கொண்டு நன்கு கெட்டியாக கிளறி விட வேண்டும்.

பின் அதனை 10-15 நிமிடம், மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பிறகு மூடியை திறந்து, கையால் லேசாக பிசைய வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, அதனை தட்டையாக தட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இனிப்பு பிஸ்கட் ரெடி!!!

English summary

Crispy Sweet Thattai

Check out this simple and delicious sweet recipe of crispy sweet thattai and give it a try. The best part of this sweet recipe is that you can make it in one go and store it for a long time.
Story first published: Monday, July 28, 2014, 16:18 [IST]
Desktop Bottom Promotion