For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைக்காய் பஜ்ஜி: உகாதி ஸ்பெஷல்

By Babu
|

உகாதி பண்டிகை வரப்போகிறது. இந்த பண்டிகையின் போது விடுமுறை என்பதால், பலர் வீட்டிலேயே இருப்பார்கள். அப்போது சுவையான பல ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு மகிழலாம். மேலும் பலருக்கு பஜ்ஜி என்றால் மிகவும் பிடிக்கும்.

அதிலும் பஜ்ஜியில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த வாழைக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று இங்கு கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Crispy Banana Bajji For Ugadi

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1 (தோலுரித்து, நீளமாக வெட்டியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு, ஓமம், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெயானது சூடானதும், அதில் நீளமாக வெட்டி வைத்துள்ள வாழைக்காயை மாவில் பிரட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி!!!

English summary

Crispy Banana Bajji For Ugadi

Try out this crispy banana bajji recipe on this Ugadi and enjoy a blessed time with friends and family.
Story first published: Wednesday, March 26, 2014, 16:00 [IST]
Desktop Bottom Promotion