For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொறுமொறுப்பான... காலிஃப்ளவர் போண்டா

By Maha
|

மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும் ஸ்நாக்ஸை செய்ய நினைத்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு போண்டா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி.

இங்கு அந்த காலிஃப்ளவர் போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!

Crisp And Tasty Gobi Bonda Recipe

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1 கப்
கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப் (பொரிக்க)
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஓமம், மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா, பச்சை மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப்போன்று அனைத்து காலிஃப்ளவரையும் பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் போண்டா ரெடி!!!

English summary

Crisp And Tasty Gobi Bonda Recipe

Gobi bonda is a tasty, crisp and easy to prepare dish. Check out the cauliflower bonda recipe.
Story first published: Wednesday, January 22, 2014, 18:11 [IST]
Desktop Bottom Promotion