For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப்

By Maha
|

அனைவரும் அசைவ சூப் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம். அப்படி எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் சூப்பையே செய்து சாப்பிட்டு அழுத்திருந்தால், சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப்பை ட்ரை செய்யுங்கள். பொதுவாக இந்த சூப்பை பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் சாப்பிடுவோம்.

ஆகவே இதனை வீட்டிலும் அருமையான சுவையில், ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடலாம். இங்கு அந்த சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து பாருங்கள்.

Chicken Noodles n Vegetables Soup

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம்
சிக்கன் ஸ்டாக் - 2-3 கப்
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
நூடுல்ஸ் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
பூண்டு - 2-3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1 சிட்டிகை
தைம் - சிறிது
செலரி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் கேரட், உருளைக்கிழங்கு, பூண்டு, செலரி ஆகியவற்றைப் போட்டு, தொடர்ச்சியாக 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து, 15 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிக்கனை போட்டு, உப்பு, மிளகு தூள் மற்றும் நூடுல்ஸ் சேர்த்து, சிக்கன் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

பின் அதில் தைம் இலையை தூவினால், சுவையான சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப் ரெடி!!!

English summary

Chicken Noodles n Vegetables Soup

Check out the recipe to make the chicken noodles and vegetables soup.
Story first published: Friday, January 3, 2014, 15:31 [IST]
Desktop Bottom Promotion