For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரட் பீன்ஸ் சூப்

By Maha
|

குளிர்காலத்தின் மாலை வேளையில் சூப் குடித்தால், குளிருக்கு இதமாக இருக்கும். ஆனால் அந்த சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கேரட் பீன்ஸ் சூப். இந்த சூப் செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

மேலும் பேச்சுலர்கள் கூட மாலை வேளையில் இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கேரட் பீன்ஸ் சூப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Carrot Beans Soup

தேவையான பொருட்கள்:

சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, காய்கறிகளை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி!!!

குறிப்பு: இதன் மேல் கொத்தமல்லி, மிளகு தூள் மற்றும் கார்ன் சிப்ஸ் சேர்த்து சாப்பிட்டால், கேரட் பீன்ஸ் சூப்பானது இன்னும் ருசியாக இருக்கும்.

English summary

Carrot Beans Soup

Here is the carrot beans soup recipe. Find out the recipe and give it a try.
Story first published: Monday, January 27, 2014, 17:47 [IST]
Desktop Bottom Promotion