For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புத்துணர்ச்சியூட்டும் ஆப்பிள் டீ

By Maha
|

நீங்கள் டீ பிரியரா? வித்தியாசமான டீ ரெசிபிக்களை சுவைக்க விருப்பமுள்ளவரா? அப்படியானால் ஆப்பிள் டீயை வீட்டிலேயே செய்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் தற்போது ஆப்பிள் விலைக் குறைவில் கிடைப்பதால், தவறாமல் செய்து ருசித்துப் பாருங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

மேலும் இது நல்ல புத்துணர்ச்சியூட்டும் பானம் கூட. சரி, இப்போது அந்த ஆப்பிள் டீயை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Apple Tea Recipe

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1
டீ தூள் - 1-2 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4-5

செய்முறை:

முதலில் ஆப்பிளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு ஆப்பிள் மென்மையாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதனை நீருடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்து, பின் அதனை ஒரு மஸ்லின் துணியைப் பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு மீதமுள்ள நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் டீ தூள், பட்டைத் தூள், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் ஆப்பிள் ஜூஸை, வடிகட்டி வைத்துள்ள டிகாசனுடன் சேர்த்து, அத்துடன் தேன் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து பரிமாறினால், ஆப்பிள் டீ ரெடி!!!

Image Courtesy: sharmispassions

English summary

Apple Tea Recipe

If you like tea am sure you will like this refreshing drink. The apple flavour compliements well with the tea flavour. Even those who dont like tea may like this because of the apple flavour in it. Do you want to know how to prepare apple tea? Take a look...
Story first published: Thursday, November 13, 2014, 18:06 [IST]
Desktop Bottom Promotion