For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஜிடேரியன் மொமொஸ்

By Maha
|

உடல் எடையை குறைக்க நினைப்போர், பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இருப்பினும் பெரும்பாலான ஸ்நாக்ஸ் ரெசிபிக்களைப் பார்த்தால், எண்ணெயில் பொரிப்பது போன்று தான் இருக்கும். ஆனால் இங்கு ஒரு நேபாளி ரெசிபியான மொமொஸ் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். பொதுவாக இந்த மொமொவை அசைவ உணவுப்பொருட்களைப் பயன்படுத்தி தான் செய்வார்கள்.

இங்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் காய்கறிகளைப் பயன்படுத்தி எப்படி மொமொ செய்வதென்று கொடுத்துள்ளோம். மேலும் இதில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, இது ஒரு அருமையான ஸ்நாக்ஸ் ரெசிபி. சரி, இப்போது அந்த மொமொஸ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Vegetarian Momos: Yummy Low Calorie Recipe

தேவையான பொருட்கள்:

மொமொவிற்கு...

மைதா - 3 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 4-5 (பொடியாக நறுக்கியது)
முட்டைகோஸ் - பாதி (பொடியாக நறுக்கியது)
கேரட் - 4 (பொடியாக நறுக்கியது)
வெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்வற்கு...

தக்காளி - 3
பூண்டு பற்கள் - 2
பச்சை மிளகாய் - 2
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொமொ செய்முறை...

முதலில் ஒரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கியதும், இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு மென்மையாக வெந்து, தண்ணீர் வற்றியதும், அதில் அஜினமோட்டோவைப் போட்டு நன்கு கிளறி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய வட்டமாக தட்டி, அதன் நடுவே காய்கறி கலவையை சிறிது வைத்து, படத்தில் காட்டியவாறு கூம்பு வடிவில் செய்து கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, அதில் செய்து வைத்துள்ள மொமொக்களை வைத்து, மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

சாஸ் செய்முறை...

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளியைப் போட்டு, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின் தக்காளியில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும்.

பின்பு மிக்ஸியில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு தட்டில் இட்லி பாத்திரத்தில் உள்ள மொமொக்களை வைத்து, அதன் மேல் சாஸை ஊற்றி பரிமாறினால், சுவையான மொமொஸ் ரெடி!!!

English summary

Vegetarian Momos: Yummy Low Calorie Recipe

A dish native to Tibet and Nepal, momos (dumplings) have gained wide spread popularity all over the world. This dumplings recipe is also very popular among the hilly states of India. The best part of this momo recipe is that it is very low in its calorie content. Here is the vegetarian momo recipe.
Story first published: Monday, December 2, 2013, 15:32 [IST]
Desktop Bottom Promotion