For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயக்கீரை பக்கோடா

By Maha
|

டிசம்பர் மாதம் குளிர்காலம் என்பது தெரியும். அந்த மாதத்தின் மாலை வேளையில் அடிக்கும் குளிருக்கு அளவே இருக்காது. அப்போது டீ அல்லது காபியுடன், ஏதேனும் மொறுமொறுவென்றும், நன்கு காரமாகவும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பெரும்பாலும் பஜ்ஜி, வடை, பக்கோடா போன்றவற்றை செய்வோம். குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு தான் இவற்றை செய்வோம்.

ஆனால் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் வெந்தயக்கீரை கொண்டு பக்கோடா செய்தால், உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதோடு, நல்ல சுவையான பக்கோடாவை சாப்பிட்டது போன்றும் இருக்கும். சரி, இப்போது அந்த வெந்தயக்கீரை பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Methi Pakora: Sumptuous Snack Recipe

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 3 கப் (நறுக்கியது)
சாதம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் சாதம், கடலை மாவு, வெந்தயக்கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மசிக்க வேண்டும்.

பின்பு அதனை சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான வெந்தயக்கீரை பக்கோடா ரெடி!!!

English summary

Methi Pakora: Sumptuous Snack Recipe

Methi pakoras are delicious snacks which can be enjoyed with tea on a winter evening. Fenugreek leaves are easily available at this time of the season. All you have to do is get them to your kitchen and fry up these healthy and crispy delights which is sure to make your taste-buds happy.
Story first published: Tuesday, December 10, 2013, 15:14 [IST]
Desktop Bottom Promotion