For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மட்டூர் வடை

By Maha
|

மட்டூர் வடை என்பது கர்நாடக ஸ்நாக்ஸ் ரெசிபியாகும். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, நன்கு மொறுமொறுவென்று இருக்கும். குறிப்பாக திடீரென்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால், அப்போது அவர்களை அசத்தும் வகையில் எளிமையாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி.

இதனை மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், வயிறும் நிறையும். சரி, இப்போது கர்நாடக ஸ்நாக்ஸ் ரெசிபியான மட்டூர் வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Crispy Maddur Vada

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மைதா, ரசை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி கையால் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலந்து, பின் தண்ணீர் ஊற்றி வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் வெங்காயத்தினால், கலவையில் சற்று தண்ணீரானது வெளியேற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒருமுறை பிசைந்தால் மாவானது மென்மையாக இருக்கும்.

பிறகு அதனை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள வடைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மட்டூர் வடை ரெடி!!!

English summary

Crispy Maddur Vada

Making maddur vada is quite simple and easy. If you are looking for something spicy, crispy and delicious then this is something you must try out. Here is the maddur vada recipe. Take a look.
Story first published: Wednesday, December 4, 2013, 15:19 [IST]
Desktop Bottom Promotion