For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஜிடேபிள் முட்டை ரோல்

By Maha
|

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி.

சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Vegetable Egg Roll

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 1
உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
முட்டைகோஸ் - 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி சில்லி சாஸ் - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து வதக்கி விட வேண்டும். கத்திரிக்காயானது நன்கு வதங்கியதும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து கிளறி, அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பிறகு அதனை சப்பாத்தியில் வைத்து, அதன் மேல் தக்காளி சில்லி சாஸ் தூவி சுருட்டினால், அருமையான வெஜிடேபிள் முட்டை ரோல் ரெடி!!!

குறிப்பு:

கத்திரிக்காய் பிடிக்காது என்றால், அதனை போடாமல் செய்யலாம். மேலும் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

English summary

Vegetable Egg Roll

Vegetable egg rolls are easy to make, full of flavor and a great way to eat your vegetables. Here's a step by step recipe you can make at home.
Story first published: Monday, September 30, 2013, 17:28 [IST]
Desktop Bottom Promotion