For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கான ஸ்பெஷல் சிக்கன் ரெசிபி!!!

By Maha
|

சைனீஸ் ரெசிபிக்களில் பல உள்ளன. அதில் குழந்தைகளுக்கு என்றும் பல ரெசிபிக்கள் உள்ளது. அதில் ஒன்று தான் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சிக்கன் ரெசிபி. பொதுவாக குழந்தைகளால் காரமான சைனீஸ் ரெசிபிக்களை சாப்பிட முடியாது. எனவே அத்தகையவர்களுக்காக தான், அவர்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், இந்த சிக்கன் ரெசிபியை ஸ்பெஷலாக செய்தனர்.

அந்த சிக்கன் ரெசிபியை ஹோட்டல்களுக்கு சென்று வாங்கிக் கொடுப்பதை விட, அதனை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில், மாலை வேளையில் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். ஏனெனில் இது மஞ்சூரியன் போன்று இருக்கும். இப்போது அந்த ஸ்பெஷலான சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Sweet n Sour Chicken Recipe For Kids

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 500 கிராம் (எலும்பில்லாதது)
முட்டை - 2
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (தட்டியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
அன்னாசி - 100 கிராம் (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்களை முட்டை கலவையில் நனைத்து, தீயை குறைவில் வைத்து, எண்ணெயில் போட்டு 5 நிமிடம் பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே எண்ணெயில் சர்க்கரை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள அன்னாசி துண்டுகள் மற்றும் குடைமிளகாய் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்கி விடவும்.

பிறகு அத்துடன் சோயா சாஸ் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து, நன்கு கிளறி, சிறிது உப்பு சேர்த்து 3-4 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பின் தக்காளி கெட்சப் சேர்த்து, அனைத்தையும் நன்கு 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

இறுதியில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

ஒருவேளை சிக்கனானது வேகாமல் இருந்தால், அப்போது அதில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ஸ்பெஷலான சிக்கன் ரெசிபி ரெடி!!!

English summary

Sweet n Sour Chicken Recipe For Kids

Children cannot eat spicy Chinese recipes like Manchurian or Chilli chicken. However, they can eat sweet n sour chicken because of its tangy and sweet taste. Check out the recipe and try it in your home.
Story first published: Wednesday, June 19, 2013, 18:22 [IST]
Desktop Bottom Promotion