For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்பிளான... சிக்கன் கிரேவி: தந்தையர் தின ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தையை அசத்த ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் கையாலேயே சுவையாக சிக்கனை சமைத்துக் கொடுத்து, அவருக்கு ஆச்சரியத்தைக் கொடுங்கள். இங்கு மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவி ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து அதன்படி சமைத்து, உங்கள் தந்தைக்கு விருந்து கொடுங்கள். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Simple Southern Chicken Recipe For Father's Day

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கடுகு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து 4-5 நிமிடம் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின் மூடியை திறந்து, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் ஒருமுறை கிளறி, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சிக்கன் கிரேவி ரெடி!!!

English summary

Simple Southern Chicken Recipe For Father's Day

Check out this simple southern chicken recipe and prepare this fuss-free, sumptuous chicken dish for your dad on this father's day.
Story first published: Sunday, June 15, 2014, 10:46 [IST]
Desktop Bottom Promotion