For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரம்ஜான் ரெசிபி: ஷாஹி சிக்கன் குருமா

By Maha
|

இஸ்லாமியர்கள் காலையில் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டு மாலையில் முடிக்கும் போது, நல்ல சுவையான உணவை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது, மிகவும் ஈஸியான உணவை சமைத்து சாப்பிட நினைப்பார்கள்.

எனவே இன்றைய ரம்ஜான் நோன்பின் ஸ்பெஷலாக, தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியான, அதே சமயம் மிகுந்த சுவையுடன் இருக்கும் சிக்கன் குருமா ரெசிபியைக் கொடுத்துள்ளது. இந்த ரெசிபியின் முந்திரி, பாதாம் போன்றவை சேர்த்து செய்வதால், இது இன்னும் அருமையான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த ரம்ஜான் ஸ்பெஷல் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா...

Ramzan Recipe: Shahi Chicken Korma

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
தயிர் - 2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
பச்சை ஏலக்காய் - 2
கருப்பு ஏலக்காய் - 4
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

மசாலா பேஸ்ட்டிற்கு...

வெங்காயம் - 2 (நறுக்கியது)
பாதாம் - 10
முந்திரி - 10
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த பேஸ்ட்டை சிக்கனில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலா மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 15-20 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் 1/2-1 கப் தண்ணீர் ஊற்றி, மீண்டும் மூடி வைத்து, குறைவான தீயில் சிக்கன் வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் அதனை இறக்கி, கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவினால், சுவையான சிக்கன் குருமா ரெடி!!!

English summary

Ramzan Recipe: Shahi Chicken Korma

Check out the special Ramzan recipe of shahi chicken korma and give it a try. Chicken korma is a dish which is prepared in almost all Muslim households during this time of ramzan.
Story first published: Tuesday, July 8, 2014, 11:20 [IST]
Desktop Bottom Promotion