For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை மிளகாய் இறால் குழம்பு

By Maha
|

இறாலைக் கொண்டு வித்தியாசமான முறையில் குழம்பு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை மிளகாய் இறால் குழம்பு பொருத்தமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பச்சை மிளகாய் இறால் குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்றது.

இங்கு அந்த பச்சை மிளகாய் இறால் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Prawns In Green Chilli Curry

தேவையான பொருட்கள்:

இறால் - 750 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பூண்டு - 10 பல் (தட்டியது)
வெங்காய விதை/விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 10
புதினா - 1 குச்சி
கொத்தமல்லி - 2 கிளைகள்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை சேர்த்து 3-4 நிமிடம் வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட்டு, துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதேப் போன்று பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியையும் மிக்ஸியில் போட்டு ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய விதை/விழுதை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் கலவையை சேர்த்து 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

அடுத்து மாங்காய் தூள், கரம் மசாலா மற்றும் சீரகப் பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, வறுத்து வைத்துள்ள இறாலையும் போட்டு, தீயை குறைவில் வைத்து மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பச்சை மிளகாய் இறால் குழம்பு ரெடி!!!

English summary

Prawns In Green Chilli Curry

Most of the curries one usually tends to make is either red or yellow gravy, but what if we tell you that tonight you can try out something different !The spicy and lip smacking green chilli prawn gravy is a delight!
Story first published: Wednesday, November 13, 2013, 18:40 [IST]
Desktop Bottom Promotion