For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பைனாப்பிள் தாய் சிக்கன்

By Maha
|

சிக்கனில் எத்தனையோ ரெசிபிக்கள் உள்ளன. அதிலும் தாய் ஸ்டைல் சிக்கன் ரெசிபிக்கள் என்றால் எப்போதுமே ஒரு தனி சுவை தான். ஆகவே உங்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, தாய் ஸ்டைல் சிக்கன் ரெசிபியான பைனாப்பிள் தாய் சிக்கன் ரெசிபியைக் கொடுத்துள்ளது.

அதைப் படித்து அந்த ரெசிபியை முயற்சித்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Pineapple Thai Chicken

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 250 கிராம் (வெட்டியது)
முந்திரி - 1/2 கப்
அன்னாசி - 2 கப் (நறுக்கியது)
வெஜிடேபிள் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகாய் - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
சிவப்பு குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
ஆய்ஸ்டர் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 3
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவி வறுத்தது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முந்திரியை போட்டு, பொன்னிறமாக வறுத்து, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, வெங்காயம், மிளகாய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின்பு தீயை அதிகரித்து, அதில் சிக்கன், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாயை சேர்த்து, உப்பு தூவி, சிக்கன் நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் ஆய்ஸ்டர் சாஸ், சோயா சாஸ், சர்க்கரை, அன்னாசி சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, முந்திரியை தூவி பிரட்டி இறக்கி, அதன் மேல் வெங்காயத் தாள் மற்றும் தேங்காய் தூவினால், பைனாப்பிள் தாய் சிக்கன் ரெடி! இதனை சாதத்துடன் சாப்பிடலாம்.

English summary

Pineapple Thai Chicken

Pineapple Thai chicken is prepared with very less ingredients and like any other Thai dish, is prepared with very less spices. So, check this recipe of pineapple thai chicken and give it a try.
Story first published: Saturday, February 8, 2014, 17:38 [IST]
Desktop Bottom Promotion