For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசலைக்கீரை சிக்கன் கிரேவி ரெசிபி

By Maha
|

இரவு நேரங்களில் சப்பாத்தி செய்யும் போது, அதற்கு வைடு டிஷ்ஷாக சிக்கனை செய்ய விரும்பினால், சிக்கனை பசலைக்கீரையுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். அதிலும் இது பசலைக்கீரை சீசன் என்பதால், இந்த கீரை விலை மலிவாக கிடைக்கும். மேலும் இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இந்த பசலைக்கீரையுடன், சிக்கனை சேர்த்து கிரேவி செய்து சாப்பிடலாம்.

இங்கு அந்த பசலைக்கீரை சிக்கன் கிரேவியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்களேன்...

Palak Chicken Gravy Recipe

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
பசலைக்கீரை - 500 கிராம் (சுத்தம் செய்து வேக வைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க)

செய்முறை:

முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வேக வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வெங்காயத்தை அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள பசலைக்கீரை பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு, பின் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து 20-25 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் தயிர் மற்றம் சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்கவும்

பின் உப்பு, மல்லி தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, க்ரீமை மேலே தூவி அலங்கரித்தால், சுவையான பசலைக்கீரை சிக்கன் கிரேவி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

English summary

Palak Chicken Gravy Recipe

Spinach is one of the superfoods which is healthy and has numerous nutritional benefits. If you are a non-vegetarian, then the palak and chicken will be a treat for your taste buds. Here is the palak chicken gravy recipe for main course.
Story first published: Monday, November 18, 2013, 19:21 [IST]
Desktop Bottom Promotion