For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மட்டன் பெப்பர் ப்ரை: ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபி

By Maha
|

மட்டன் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதிலும் ஆந்திரா ஸ்டைலில் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் இந்த வார இறுதியில் ஆந்திரா ஸ்டைல் மட்டன் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

இங்கு அந்த மட்டன் பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.

Mutton Pepper Fry: Andhra Spl Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு...

சோம்பு - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2-4

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள அனத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் மட்டனை அப்படியே நீருடன் வாணலியில் ஊற்றி, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.

அடுத்து மிளகாய் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

இறுதியில் அதில் மிளகு தூளை தூவி, 2-3 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லியை தூவினால், ஆந்திரா ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ப்ரை ரெடி!!!

English summary

Mutton Pepper Fry: Andhra Spl Recipe

Mutton pepper fry is recipe that is for spice lovers. You can try the mutton pepper fry recipe only if you love spicy Andhra food. Take a look...
Story first published: Saturday, May 31, 2014, 18:49 [IST]
Desktop Bottom Promotion