For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா

By Maha
|

மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று. இது மிகவும் சுவையானதும் கூட. மட்டனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குருமா, மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல. இவை அனைத்துமே மிகவும் சுவையானது. இத்தகைய மட்டனை பல ஸ்டைலில் சமைக்கலாம். அதில் எப்போதும் செட்டிநாடு தான் பிரபலமானது.

இப்போது அவற்றில் ஒரு ஸ்டைலான கேரளா ஸ்டைலில் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.

Mutton Korma: Kerala Style Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.

பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!!! இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

English summary

Mutton Korma: Kerala Style Recipe | கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா

Mutton korma is a rich and spicy food. You can bring a spicy side dish in your meal by trying Kerala style mutton korma. Check out the recipe.
Story first published: Sunday, April 28, 2013, 13:46 [IST]
Desktop Bottom Promotion