For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்ரீத் ஸ்பெஷல்: மட்டன் தோசை ரெசிபி

By Maha
|

தோசைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மட்டன் தோசை. இது ஒரு சிறந்த ஆரோக்கியமான காலை உணவு. இந்த தோசையை இரவு நேரங்களில் கூட செய்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். அதுவும் இன்று பக்ரீத். ஆகவே இந்நாளில் சற்று வித்தியாசமாக மட்டன் தோசையை செய்து சாப்பிடலாம்.

இதன் செய்முறை மிகவும் எளிமையானது. சரி, இப்போது அந்த மட்டன் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mutton Dosa Recipe

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
மட்டன் கீமா - 1/2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பட்டை - 1
கிராம்பு - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

5 மணிநேரம் ஆன பின்னர், அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை கழுவி, கிரைண்டரில் போட்டு, தோசை மாவு பதத்திற்கு அரைத்து, தோசை மாவை 4-5 மணிநேரம் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மட்டன் கீமாவை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு மட்டன் கீமா, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். வேண்டுமெனில், அதில் சிறிது எண்ணெயை சேர்த்து மட்டனை வேக வைக்கலாம்.

பின்னர் பச்சை பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வதக்கி, கலவையானது ஒரு பதத்திற்கு வந்ததும், அதனை தோசை மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவைக் கொண்டு தோசை ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் தோசை ரெடி!!! இதனை மட்டன் கிரேவியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

English summary

Mutton Dosa Recipe

The mutton dosa recipe for breakfast will give you an energetic start for the day and will also improve your appetite in order for you to have a healthy heavy lunch. This mutton dosa recipe is easy to make and is not at all time consuming. This is how you make the mutton dosa for Bakrid, take a look.
Desktop Bottom Promotion