For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகலாய் ஷாமி கபாப்: ரம்ஜான் ரெசிபி

By Maha
|

ரம்ஜான் பண்டிகை வரப் போகிறது. அந்நாளன்று பொதுவாக முஸ்லீம் வீடுகளிலும் பிரியாணி தான் ஸ்பெஷலாக இருக்கும். மேலும் முஸ்லீம்கள் பெரும்பாலும் மட்டனைத் தான் சமைப்பார்கள். எனவே இந்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு உங்கள் வீட்டில் பிரியாணியை மட்டுமின்றி, முகலாய் ஷாமி கபாப்பும் செய்யுங்கள்.

இது மிகவும் ஈஸியான மட்டன் ரெசிபி மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த முகலாய் ஷாமி கபாப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Mughlai Shami Kebab: Ramzan Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 1/2 கிலோ
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2-3
பச்சை ஏலக்காய் - 2
கருப்பு ஏலக்காய் - 1
மிளகு - 5
பிரியாணி இலை - 3
கடலைப் பருப்பு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் கீமாவை நன்கு நீரில் கழுவி, நீரை வடித்து, பின் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் ஒரு மஸ்லின் துணியில் பிரியாணி இலை, மிளகு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து கட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு குக்கரில் கடலைப் பருப்பு, உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் மசாலா பொருட்கள் சேர்த்து கட்டி வைத்துள்ள மஸ்லின் துணியை போட்டு, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள கீமா, மிளகாய் தூள், உப்பு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் எடுத்து தட்டையாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுத்தால், முகலாய் ஷாமி கபாப் ரெடி!!!

English summary

Mughlai Shami Kebab: Ramzan Recipe

Ramzan recipes usually comprise of kebabs and curries. Try this shami kebab recipe during the Ramzan Iftar feasting. To know more..
Story first published: Friday, June 27, 2014, 16:06 [IST]
Desktop Bottom Promotion