For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரம்ஜான் ஸ்பெஷல்: மொகலாய் மட்டன் புலாவ்

By Maha
|

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகைக்கு, இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருப்பார்கள். இந்த ஒரு மாத காலத்தை தான் ரமலான் மாதம் என்று சொல்வார்கள். இந்த மாதத்தில் நாள் முழுவதும் நோன்பு இருந்து, ரம்ஜான் பண்டிகையன்று நன்கு சுவையாக பல அசைவ உணவுகளை சமைத்து ஒரு கட்டு கட்டுவார்கள். அப்போது பிரியாணியையே எப்போதும் செய்யாமல், சற்று வித்தியாசமாக ட்ரை செய்து பார்க்கலாம்.

அப்படியெனில் அதற்கு மொகலாய் மட்டன் புலாவ் சரியானதாக இருக்கும். இந்த மட்டன் புலாவ் மிகவும் சுவையானது மற்றும் எளிமையானதும் கூட. ஆகவே இந்த ரம்ஜான் பண்டிகைக்கு, மொகலாய் மட்டன் புலாவ் ரெசிபியை ட்ரை செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Mughlai Mutton Pulao Recipe For Ramzan

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ (சிறிதாக வெட்டியது)
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
மிளகு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை (பாலில் ஊற வைத்தது)
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள மட்டனை போட்டு 2 நிமிடம், வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின்னர் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 2-3 நிமிடம் வறுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் உள்ள மட்டனானது பாதி அளவு வெந்திருக்கும். மேலும் அதைப் பார்த்தால், கிரேவி போன்று காணப்படும். இவ்வாறு கிரேவி போன்று இருப்பதை எடுத்து, குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை மேலே ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

இப்போது சூப்பரான மொகலாய் மட்டன் புலாவ் ரெடி!!!

English summary

Mughlai Mutton Pulao Recipe For Ramzan

Mughlai mutton pulao is a filling rice dish that can provide you with a heavy dinner after an entire day of fasting. That is why it is great Ramzan recipe. Here is the recipe. Check Out and Try it...
Story first published: Thursday, July 18, 2013, 12:59 [IST]
Desktop Bottom Promotion