For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

By Maha
|

கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு. இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம்.

இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Meen Moilee: Kerala Fish Curry

தேவையான பொருட்கள்:

வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடே வேண்டும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!! இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

English summary

Meen Moilee: Kerala Fish Curry

Meen Moilee or fish Moilee is a famous fish curry from the coasts of Kerala. The word Meen means fish and Moilee is the stew. Take a look at the recipe of Fish Moilee and give it a try.
Story first published: Tuesday, March 18, 2014, 12:33 [IST]
Desktop Bottom Promotion