For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாங்காய் சிக்கன் குழம்பு

By Maha
|

இந்திய சிக்கன் ரெசிபிக்களில் பிரபலமான ஒன்று தான் மாங்காய் சிக்கன் குழம்பு. மேலும் இது ஒரு கோவா ரெசிபி. இதில் மாங்காய் சேர்க்கப்பட்டிருப்பதால், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைப்போர், இந்த மாங்காய் சிக்கன் குழம்பை செய்யலாம்.

இங்கு அந்த மாங்காய் சிக்கன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

Mango Chicken Curry

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (அரைத்தது)
மாங்காய் - 1 (சிறியது மற்றும் தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
பட்டை - 1 இன்ச்
பிரியாணி இலை - 1
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் பேஸ்ட் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி, 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காய் மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் வதக்க வேண்டும்.

அப்படி வதக்கும் போது, எண்ணெயானது தனியே பிரிந்து வந்தால், அப்போது வதக்கி வைத்துள்ள தேங்காய் வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் கிளறி விட வேண்டும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 8-10 நிமிடம் தட்டு கொண்டு மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்ததும், அதனை இறக்கினால், சுவையான மாங்காய் சிக்கன் குழம்பு ரெடி!!!

English summary

Mango Chicken Curry

Mango chicken is undeniably a specialty of the coasts. This Indian curry recipe is characteristically more popular in the island city of Mumbai and the 'gaons' of Goa. Here is the recipe. Check out.
Story first published: Saturday, December 14, 2013, 18:47 [IST]
Desktop Bottom Promotion