For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்லோரியன் ஸ்டைல் இறால் சுக்கா

By Maha
|

Mangalorean Style Prawn Sukka Recipe
கடல் உணவுகளில் இறால் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய இறாலை சமைத்தால், அது அசைவ உணவு போன்றே இருக்காது. அந்த அளவு அதை சமைக்கும் போது, அது சுருங்கி, சைவ உணவு போன்று காணப்படும். ஒவ்வோரு ஊரிலும் அசைவ உணவுகளின் டேஸ்ட் வேறுபடும். இப்போது மங்லோரியன் ஸ்டைலில் இறால் சுக்கா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

இறால் - 300 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளி - 1 இன்ச் (நீரில் ஊற வைத்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை நன்கு கழுவி, பௌலில் போட்டு வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், வர மிளகாய் மற்றும் மல்லியை பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேங்காயை போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்து, ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்க வேண்டும்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள வரமிளகாய் கலவையை போட்டு, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் தேங்காய் பேஸ்ட்டை போட்டு மீண்டும் 3-4 நிமிடம் வதக்கி, உப்பு மற்றும் புளி நீரை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் வேக வைத்துள்ள இறால் கலவையை இதில் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, கிரேவி கெட்டியானதும் இறக்க வேண்டும்.

இப்போது சுவையான இறால் சுக்கா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Mangalorean Style Prawn Sukka Recipe | மங்லோரியன் ஸ்டைல் இறால் சுக்கா

Prawn Sukka is an Indian seafood recipe that is cooked in different ways across the country. Here we will be making prawn sukka in the Managalorean style because it is one of the most popular varieties of this spicy dish.
Desktop Bottom Promotion