For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப்

By Maha
|

மட்டனைக் கொண்டு குழம்பு செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக மட்டன் கீமா வாங்கி, அதனைக் கொண்டு கபாப் செய்து பாருங்கள். அதிலும் அதனை லக்னோ ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

செட்டிநாடு மட்டன் குழம்பு

குறிப்பாக இந்த கபாப் செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஈஸியான... மட்டன் பிரியாணி

Lucknow Style Galouti Kebab Recipe

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.

பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!

English summary

Lucknow Style Galouti Kebab Recipe

The Galouti kebabs have taste that you just cannot compare with anything else. So, whether a foodie or not, you must try this exotic and mouthwatering Galouti kebab recipe and refresh your taste-buds.
Story first published: Thursday, March 13, 2014, 12:02 [IST]
Desktop Bottom Promotion