எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன்

Posted by:
Published: Friday, December 28, 2012, 12:13 [IST]
 

எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன்

சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது)
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
பூண்டு பொடி - 1 டீஸ்பூன்
வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வர மிளகாய் - 3 (அரைத்தது)
சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, தண்ணீரை முழுவதும் வடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பௌலில் சீரகப் பொடி, அரைத்த வரமிளகாய், உப்பு, வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி மற்றும் சிவப்பு குடைமிளகாய் பொடி போன்றவற்றை போட்டு கலந்து, அதில் அந்த சிக்கனை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விட்டு, பிரட்டி, இறுதியாக எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான எலுமிச்சை சீரக ரோஸ்டட் சிக்கன் ரெடி!!!

குறிப்பு: பூண்டு மற்றும் வெங்காயப் பொடி கிடைக்காதவர்கள், வேண்டுமென்றால் பூண்டையும், வெங்காயத்தையும் அரைத்து சேர்க்கலாம்.

English summary

Lemon Cumin Roasted Chicken | எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன்

Chicken is one of the most popular non-vegetarian dish for meat lovers. You can have it as a snack or prepare as a side dish in a meal. Here is a simple recipe to prepare lemon cumin roasted chicken. Check out the recipe.
Write Comments