For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

By Harman Vaz
|

இந்தியாவில் கொங்கன் ஸ்டைல் உணவுகள் மிகவும் பிரபலமானது. அத்தகையவற்றில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலை வைத்து செய்யப்படும் கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு மிகவும் சுவையானது. அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பை வீட்டிலேயே ஈஸியான முறையில் சமைக்கலாம்.

இப்போது அந்த கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Konkan Style Prawns Recipe

தேவையான பொருட்கள்:

இறால் - 1 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)
வெங்காயம் - 3 (பெரியது, நறுக்கியது)
தக்காளி - 3 (பெரியது, நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
பூண்டு - 3 டீஸ்பூன் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு சிறு பாத்திரத்தில் சுத்தமாக கழுவிய இறால், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, 15-30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 5 நிமிடமோ அல்லது இறால் சுருங்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி சேர்த்து, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Konkan Style Prawns Recipe | கொங்கன் ஸ்டைல் இறால் குழம்பு ரெசிபி

Here is one such traditional recipe, a very traditional prawn curry based preparation. As long as you don't get overly experimental, this recipe is a sure shot party pleaser. Lets have a look on the recipe of Konkan style prawns recipe.
Story first published: Thursday, April 18, 2013, 13:59 [IST]
Desktop Bottom Promotion