For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோஹினூர் சிக்கன் ரெசிபி

By Maha
|

விடுமுறை நாட்களில் தான் நன்கு சுவையான உணவுகளை சமைத்து, நிம்மதியாக சாப்பிட முடியும். அதிலும் சற்று வித்தியாசமான முறையில் சிக்கனை சமைத்து சாப்பிட்டால், அது வித்தியாசமான ரெசிபியாக இருப்பதோடு, வித்தியாசமான அனுபவத்தையும் பெறலாம். அந்த வகையில் கோஹினூர் வைரத்திற்கு மட்டும் பிரபலமல்ல, சிக்கன் ரெசிபிக்கும் தான் பிரபலமானது. ஏனெனில் அந்த அளவு கோஹினூர் சிக்கன் ரெசிபியின் ருசியானது இருக்கும்.

இப்போது அந்த கோஹினூர் சிக்கன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Kohinoor Chicken Recipe

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (அரைத்தது)
தேங்காய் பால் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - தேவையான அளவு
கரம் மசாலா - 1-2 சிட்டிகை
குங்குமப்பூ - 1-2 சிட்டிகை
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, கரம் மசாலா மற்றும் குங்குமப்பூ போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கனை துண்டுகளை மைதா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அடுத்து தக்காளி மற்றும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

கிரேவியானது நன்கு கொதித்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, கிரேவியானது ஓரளவு சுண்டும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

பின்னர் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

English summary

Kohinoor Chicken Recipe

Kohinoor chicken is an excellent experiment option to start with. It is an innovative and easy chicken recipe which will take your taste-buds on a delightful ride. So, stop thinking and start experimenting. Check out the exotic and delicious recipe of Kohinoor chicken.
Story first published: Saturday, August 24, 2013, 18:42 [IST]
Desktop Bottom Promotion