For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவாதி ஸ்டைல் முந்திரி மட்டன் ரெசிபி

By Maha
|

மொகலாய ஸ்டைல் மற்றும் பல்வேறு நறுமணமிக்க மசாலா பொருட்கள் சேர்ந்து செய்தால், அது தான் அவாதி ஸ்டைல். இந்த ஸ்டைல் உணவுகளில் கபாப், பிரியாணி, குருமா மற்றும் இனிப்புகள் என்று பல உள்ளன. இப்போது அந்த அவாதி ஸ்டைல் உணவுகளில் ஒன்றான முந்திரி மட்டன் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். மேலும் இதனை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Khajur Gosht: The Taste Of Awadh

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ
உலர்ந்த பேரிட்சை - 12
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பேஸ்ட் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, மஞ்சள் தூள், முந்திரி பேஸ்ட், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 5- நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

பிறகு குக்கரை மூடி, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் விசிலானது போனதும், குக்கரை திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் தாளித்து, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, குக்கரில் உள்ள மட்டன் கலவையை ஊற்றி, பின் அதில் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சேர்த்து, 6-7 நிமிடம் குறைவான தீயிலேயே வேக வைக்க வேண்டும்.

இறுதியில் இதில் ஏலக்காய் பொடி, கரம் மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முந்திரி மட்டன் ரெசிபி ரெடி!!!

English summary

Khajur Gosht: The Taste Of Awadh

The varieties of kebabs, biryanis, kormas and sweets can only be found in the Awadhi cuisine. Today we have a special mutton recipe for you straight from the kitchens of Awadh.
Story first published: Saturday, November 23, 2013, 12:16 [IST]
Desktop Bottom Promotion