For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல் இறால் மசாலா

By Maha
|

கேரளா ஸ்டைல் ரெசிபியின் ஸ்பெஷலே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சமைப்பது தான். அந்த வகையில் கடல் உணவுகளில் ஒன்றான இறாலைக் கொண்டு எளிமையான முறையில் கேரளா ஸ்டைலில் இறால் மசாலா செய்யலாம். இறாலில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளதால், இதனை வாரம் ஒரு முறை உட்கொண்டால், அதில் உள்ள சத்துக்களை பெற முடியும்.

இப்போது அந்த கேரளா ஸ்டைல் இறால் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Kerala Style Prawns Masala

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ (நன்கு கழுவி சுத்தம் செய்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி, மிளகாய் தூள் நன்கு அடர் நிறத்தில் வரும் போது, தண்ணீர் ஊற்றி, இறாலை சேர்த்து, தட்டு கொண்டு மூடி 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து, வேக வைக்க வேண்டும்.

பின்பு தட்டை திறந்து, தீயை அதிகரித்து, கலவையில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதனை வேண்டிய அளவில் சுண்ட வைத்து இறக்கினால், சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

English summary

Kerala Style Prawns Masala

Here is a Kerala style prawn masala which is sure to take your taste-buds on a spicy ride. This prawn curry is prepared using coconut oil which adds a unique and fragrant flavour to this seafood recipe. So, check out this recipe of Kerala style prawns masala and do give it a try.
Story first published: Monday, October 21, 2013, 19:22 [IST]
Desktop Bottom Promotion