For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீமா டிக்கி

By Maha
|

மட்டன் பிரியர்களே! வடஇந்திய ரெசிபியான கீமா டிக்கியை சுவைத்துள்ளீர்களா? இது ஒரு முகலாய் கீமா ரெசிபி. இது டெல்லி மற்றும் லக்னோவில் மிகவும் பிரபலமானது. மேலும் இந்த ரெசிபியானது மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. அதிலும் விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது.

இங்கு அந்த கீமா டிக்கியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Keema Tikki: Fried Mutton Cutlets

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 750 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் எண்ணெய் மற்றும் நெய் தரவி அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து, நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அடுத்து அதில் ஊற வைத்துள்ள கீமா கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கீமா டிக்கி ரெடி!!!

English summary

Keema Tikki: Fried Mutton Cutlets

Keema tikki is a delicious type of mutton cutlet. This Keema recipe is made with ground mutton. To try these spicy Indian cutlets at home, read on..
Story first published: Sunday, July 27, 2014, 10:45 [IST]
Desktop Bottom Promotion