For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரைக்குடி சிக்கன் மசாலா ரெசிபி

By Maha
|

பொதுவாக சிக்கன் என்றால் அனைவருக்கும் செட்டிநாடு சிக்கன் தான் ஞாபகம் வரும். ஆனால் செட்டிநாடு சிக்கன் போன்றே காரைக்குடி சிக்கனும் மிகவும் ருசியாக இருப்பதோடு, நல்ல காரமாகவும் இருக்கும். ஆகவே எப்போதும் செட்டிநாடு ஸ்டைலையே பின்பற்றாமல், கொஞ்சம் வித்தியாசமாக காரைக்குடி ஸ்டைலையும் பின்பற்றுங்கள். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை ட்ரை செய்யலாம்.

இங்கு காரைக்குடி ஸ்டைல் சிக்கன் மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சி செய்து பாருங்களேன்...

Karaikudi Chicken Masala Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

ஊற வைப்பதற்கு...

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பேஸ்ட்டிற்கு...

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8-10 பற்கள்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
மிளகு - 10
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த சிக்கனில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தேங்காய், கசகசா மற்றும் சோம்புவை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து 2-3 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து 3-4 நிமிடம் வதக்கிய பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

அடுத்து தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி, 8-10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 15-20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

சிக்கனானது நன்கு வெந்துவிட்டால், அதனை இறக்கினால், சுவையான காரைக்குடி சிக்கன் மசாலா ரெடி!!!

English summary

Karaikudi Chicken Masala Recipe

Chettinad chicken is a famous dish all over the world. Similarly, a more spicy version with pepper known as the Karaikudi chicken masala is a real delight for the spice lovers. So, check out the recipe of Karaikudi chicken masala and give it a try.
Story first published: Wednesday, December 4, 2013, 11:20 [IST]
Desktop Bottom Promotion