For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவையான கடாய் சிக்கன்

By Mayura Akilan
|

Kadai Chicken
சிக்கன் புரதச் சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் எலும்பு இல்லாமல் சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். கடாயில் செய்யப்படும் சிக்கன் சத்துக்களை அப்படியே தக்கவைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 3

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

மல்லிதூள் – 2 டீ ஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீ ஸ்பூன்

மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்

பட்டை, கிராம்பு, அன்னாசி பூ தாளிக்க

நெய் – 2 டீ ஸ்பூன்

எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மல்லித்தழை – சிறிதளவு

கடாய் சிக்கன் செய்முறை

எலும்பில்லாத சிக்கனை நன்கு கழுவி உப்பு போட்டு ஊறவைக்கவும்.

கடாயில் நெய், எண்ணெய் சேர்த்து சூடு செய்யவும். அதில் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.இதனுடன் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பாதிஅளவு மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வரை வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு குழைவாக வதக்கிக் கொள்ளவும்.

தக்காளி நன்கு வதங்கியவுடன், சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மீதமுள்ள பொடி வகைகளை சேர்த்து , அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் மூடி போட்டு வேக வைக்கவும்.சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு மல்லித்தழை தூவவும். கடாய் சிக்கன் ரெடி.

குக்கரில் செய்வதை விட எலும்பில்லாத சிக்கனை கடாயில் சமைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும். முழு சத்துக்களும் அப்படியே கிடைக்கும்.

English summary

Kadai Chicken recipe | சுவையான கடாய் சிக்கன்

Boneless chicken cooked in a kadai - This dish takes it's real color and flavor by cooking in a iron utensil.
Story first published: Saturday, April 14, 2012, 13:57 [IST]
Desktop Bottom Promotion