For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐதராபாத் மட்டன் மசாலா: ரம்ஜான் ஸ்பெஷல்

By Maha
|

இன்று ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. எந்த முஸ்லீம்களின் வீடுகளுக்குள் நுழைந்தாலும், வாசனையானது கமகமக்கும். ஏனெனில் அவர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்று செய்து அசத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி பிரியாணி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக ஏதாவது ஸ்பெஷலாக செய்ய நினைத்தால் ஐதராபாத் மட்டன் மசாலா செய்யுங்கள்.

இது நன்கு காரசாரமாக இருப்பதுடன், நல்ல சுவையுடனும் இருக்கும். சரி, இப்போது அந்த ஐதராபாத் மட்டன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Hyderabad Mutton Masala: Ramzan Special

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
தயிர் - 100 கிராம்
மிளகுத் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
மிளகு - 10
அன்னாசிப்பூ - 4
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
பட்டை - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதில் தயிர், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

இறுதியில் அதனை குக்கரில் போட்டு, பின் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கினால், மட்டன் மசாலா ரெடி!!!

English summary

Hyderabad Mutton Masala: Ramzan Special

Hyderabad Mutton Masala is a spicy meat curry from Andhra. To try this special Ramzan recipe for your family read on..
Story first published: Monday, July 28, 2014, 17:58 [IST]
Desktop Bottom Promotion