For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரமான... க்ரீன் சில்லி சிக்கன்

By Maha
|

குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி காரசாரமாக சாப்பிட அசைவ உணவுகளைத் தான் பெரும்பாலானோர் விரும்புவார்கள். உங்களுக்கு சிக்கன் பிடிக்குமெனில், பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் ரெசிபியை செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இது முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்வதால், இதன் சுவை வித்தியாசமாக இருக்கும்.

சரி, இப்போது பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படும் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Hot & Spicy Green Chilli Chicken Recipe

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
பச்சை மிளகாய் - 1 கப் (சிறியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் 3 பச்சை மிளகாய் போட்டு, தண்ணீர் சிறிது உப்பு, உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை சேர்த்து தாளித்து, பின் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 6-7 நிமிடம் நன்கு பிரட்டி, பின் மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிரட்டி, 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

பின் மூடி வைத்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கினால், க்ரீன் சில்லி சிக்கன் ரெடி!!!

English summary

Hot & Spicy Green Chilli Chicken Recipe

This winter set your tongue on fire with this hot and spicy green chilli chicken recipe. It is different, spicy and tastes amazing. Do give it a try.
Story first published: Tuesday, December 23, 2014, 13:28 [IST]
Desktop Bottom Promotion