For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

By Maha
|

ஆந்திரா ஸ்டைல உணவுகள் என்றாலே மிகவும் காரமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்களில் இருந்து தண்ணீர் வரும் அளவு காரமானது இருக்கும். ஆனால் அதற்கேற்றாற் போல் ஆந்திரா ஸ்டைல் உணவுகளின் சுவைக்கு நிகர் எதுவும் இருக்காது.

இப்போது அத்தகைய ஆந்திரா ஸ்டைல் அசைவ குழம்புகளுள் ஒன்றான மட்டன் குழம்பை எப்படி எளிதில் வீட்டில் செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து அசத்துங்கள்....

Hot N Spicy Andhra Style Mutton Curry

தேவையான பொருட்கள்:

மட்டன் - 700 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 10
பச்சை ஏலக்காய் - 5
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 5
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சீரகம், கசகசா, மல்லி, மிளகு, கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் சோம்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை கிளறி விட வேண்டும்.

பின் வேக வைத்துள்ள மட்டன் கலவையை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடி, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கிளறி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

English summary

Hot N Spicy Andhra Style Mutton Curry | ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

To Andhra style mutton curry, the meat is first boiled. Then the boiled meat is cooked in a thick and spicy gravy. You can easily try this Andhra recipe at home.
Story first published: Sunday, April 21, 2013, 12:43 [IST]
Desktop Bottom Promotion