For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரவா மீன் ப்ரை

By Maha
|

கடல் உணவுகளில் ஒன்றான மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், வாரம் ஒரு முறை மீனை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. சிலருக்கு மீனை குழம்பு வைத்தால் தான் பிடிக்கும். ஆனால் சிலருக்கோ மீனை ப்ரை செய்தால் தான் பிடிக்கும்.

அந்த வகையில் இங்கு ஒரு வித்தியாசமான, அதே சமயம் மிகுந்த சுவையுடன் இருக்கும் ஒரு மீன் ப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ளது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!

Homemade Rava Fish Fry Recipe

தேவையான பொருட்கள்:

வஞ்சர மீன் - 8 துண்டுகள்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இலைகள்
வரமிளகாய் - 5
மல்லி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கசகசா - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 சிட்டிகை
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
ரவை - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

பின்னர் வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சீரகம் மற்றும் மல்லி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை ஃப்ரிட்ஜில் உள்ள மீனில் நன்கு தடவி, மீண்டும் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீனை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, அதில் உள்ள ப்ளேவர் எண்ணெயில் இறங்கும் வரை சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, ரவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவா மீன் ப்ரை ரெடி!!!

English summary

Homemade Rava Fish Fry Recipe

Rava fish fry is a very easy fish fry recipe. This sooji fish fry recipe can be made at home in minutes. To try this homemade fish fry, read on.
Story first published: Wednesday, March 12, 2014, 12:37 [IST]
Desktop Bottom Promotion