For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவா ஸ்பெஷல்: இறால் பல்சாவ் ரெசிபி

By Maha
|

ஞாயிற்று கிழமை வந்தாலே வீட்டில் அசைவ உணவுகளின் வாசனை வீட்டையே தூக்கிவிடும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் நல்ல சுவையான உணவை ரசித்து ருசித்து சாப்பிட முடியும். அதனால் பலர் இந்நாளில் பல்வேறு வித்தியாசமான அசைவ உணவுகளை முயற்சிப்பார்கள். இப்போது அந்த வகையில் ஒரு கோவா ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.

அந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரும்பி சாப்பிடக்கூடியது. இப்போது அந்த கோவா ஸ்பெஷல் ரெசிபியான இறால் பல்சாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Goan Prawn Balchao Recipe

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலா பேஸ்ட்டிற்கு...

காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 10
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 6 பற்கள்
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய உருண்டை
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் மசாலா பேஸ்ட்டிற்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 10 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் வதக்க வேண்டும்.

இறுதியில் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சூப்பரான இறால் பல்சாவ் ரெசிபி ரெடி!!!

English summary

Goan Prawn Balchao Recipe

Prawn Balchao is a spicy Goan delicacy. The use of exotic spices in this recipe gives it an irresistible flavour. Here goes the recipe of Prawn Balchao. Check it out and do give it a try.
Story first published: Saturday, October 26, 2013, 18:13 [IST]
Desktop Bottom Promotion