For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூண்டு இறால் குழம்பு

By Maha
|

வார இறுதியில் நல்ல அசைவ குழம்பை செய்து சாப்பிட்டால், நன்கு சுவையாக இருக்கும். அதிலும் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சாப்பிட்டு போர் அடித்தால், அப்போது இறாலை சற்று வித்தியாசமான சுவையில் ட்ரை செய்து பார்க்கலாம்.

அப்படியெனில் இந்த வாரம் பூண்டு இறால் குழம்பை முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இப்போது அந்த பூண்டு இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Garlic Prawn Curry Recipe

தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி விட வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 1 நிமிடம் வேக வைத்து, பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

இறாலானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான பூண்டு இறால் குழம்பு ரெடி!!!

English summary

Garlic Prawn Curry Recipe

Garlic prawn curry is one such recipe which is ideal for your kids if they love to have prawns. This is a simple recipe which looks quite attractive and tastes extremely delicious. Try out this awesome recipe of garlic prawn curry.
Story first published: Saturday, June 1, 2013, 19:47 [IST]
Desktop Bottom Promotion