For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை ஓட்ஸ் ஆம்லெட்

By Maha
|

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த ரெசிபியை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு இந்த மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.

இது சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், மிகவும் சுவையுடன் இருக்கும். இப்போது அந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Egg White Oatmeal Omelette

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
முட்டையின் வெள்ளைக்கரு - 4
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி - 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும்.

பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டூம்.

பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்றி, பின் அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்றி, அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்தமல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி!!!

English summary

Egg White Oatmeal Omelette

Egg white oatmeal omelette is a very protein-rich breakfast. You can try the egg white oatmeal omelette recipe for quick and healthy breakfast recipe.
Story first published: Tuesday, April 29, 2014, 18:35 [IST]
Desktop Bottom Promotion